Wednesday, September 23, 2015

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன்...

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன்
கிடைக்கும்?.

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்

பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.

மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும்.

எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.

கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

Thursday, September 10, 2015

Tips Tips... Part 16

மலர் மருத்துவம்
* மல்லிகை மலரை எண்ணெய்யிலிட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்து வர தலைவலி, கண் எரிச்சல் நீங்கும்.
* புளியம்பூவை நெய் விட்டு வதக்கித் துவையல் செய்து சாப்பிட பித்த வாந்தி தீரும்.
* கரப்பான், சொறி, சிரங்கு இவற்றுக்கு புன்னை மலரை அரைத்துப் பற்றுப் போட்டு வர குணமாகும்.
* வாழைப்பூ குடல் புண், சீதபேதி, மூலம் சம்பந்தமான நோய்களைத் தீர்க்க வல்லது.
* மாம்பூவை நீரிலிட்டுக் காய்ச்சி அந்த நீரால் வாய் கொப்பளித்தால் பல் நோய்கள் தீரும்.
* நீரிழிவு நோய்க்கு அல்லி மலர் கஷாயம் சிறந்த மருந்தாகும்.
(மலர்களின் மருத்துவம் என்ற நூலிலிருந்து)
நெ.இராமன், சென்னை.

சமையல் டிப்ஸ்
* கீரையை வேக வைக்கும்போது கொஞ்சம் எள் சேர்த்து வேக வைத்தால் கீரை நிறம் மாறாமல் பசுமையாக இருக்கும்.
* காய்கறிகளின் தோலை ஒட்டித்தான் அவற்றின் சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதனால் தோலைச் சீவும் போது மிகவும் லேசாகச் சீவ வேண்டும்.

அழகு டிப்ஸ்...
* சில துளிகள் பாதாம் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு இரண்டையும் கலந்து முகத்தில் மென்மையாகத் தடவிக் கொள்ளுங்கள். பதினைந்து நிமிடம் கழித்துக் குளித்தால் முகச் சருமம் பட்டுப் போல மென்மையாக இருக்கும்.
* கொஞ்சம் பாலை எடுத்து அதில் எலுமிச்சைச் சாற்றைச் சில துளிகள் பிழிந்து கலந்து முகம் பாதங்கள், கைகள், கழுத்து முதலிய இடங்களில் தடவிக் கொண்டு பதினைந்து நிமிடங்கள் கழித்துக் குளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் சருமம் ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் எடுப்பாகவும் இருக்கும்.
* தினமும் தூங்கப் போவதற்கு முன்பு தேயிலை தண்ணீர் கொண்டு கண்களைச் சுற்றி கழுவி வந்தால் சுருக்கம், கறுப்பு வளையம் நீங்கி பளபளப்பு உண்டாகும்.
* பாதாம் பருப்புகளை தோலுரித்து நன்றாக அரைத்து முட்டையின் வெள்ளைக் கருவையும் சில சொட்டு எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து முகத்தில் தடவி ஊறிய பின் முகத்தை அலம்பினால் முகத்திலுள்ள கரும்புள்ளி, செம்புள்ளி மறைந்துவிடும்.
* வெள்ளரிக்காயைத் துருவி சாறு பிழிந்து எண்ணெய் பசை, நார்மல் சருமம் உள்ளவர்கள் தடவி வந்தால் சருமத்தில் இருக்கும் நுண்ணிய துவாரங்கள் சுத்தமாகும்.
* பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊற வைத்து காலையில் நன்றாக அரைத்து தேய்த்து வர, முகம் சிவப்பழகு கிடைத்துவிடும்.
* நல்ல சந்தனத்தில் ஜாதிக்காயைப் போட்டு அரைத்து முகத்தில் தடவி வந்தால் பருக்கள் மறைந்து முகம் பளபளக்கும்.

எந்த நேரத்தில் என்னென்ன சாப்பிட வேண்டும்?
* தயிரைத் தயிராக உண்ண ஒரு பக்குவம் இருக்கிறது. முப்பது வயதுக்கு மேல் தயிரை மோராக்கித்தான் உண்ண வேண்டும். அந்த வயதுக்கு மேல் நிறைய மோரே சாப்பிட வேண்டும். தயிரைச் சாப்பிடுவதானால் அதை ரசம், குழம்பு, சாதம் சாப்பிட்ட பின் கடைசியாக உண்ணக் கூடாது. தயிரை காலையில்தான் உண்ண வேண்டும்.
காலையில் வெறும் தயிரில் லேசாக உப்புச் சேர்த்து ஸ்பூனால் எடுத்து விழுங்கலாம். இட்லியில் தோய்த்து உண்ணலாம். ரொட்டிக்குப் போட்டு கொண்டால் உப்புத் தேவையில்லை. ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
இரவில் தயிர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மோர் சேர்த்துக் கொள்ளலாம். இரவு வெறும் மோர் சோறும், பழங்களும் போதும். இரவில் பலகாரங்களை உண்ணக் கூடாது. பழங்கள் நல்ல இரவு ஆகாரம்.
* காலையில் முழுச்சாப்பாடு சாப்பிடக் கூடாது. அப்போது ஆவியில் அவித்த அல்லது அதிகம் எண்ணெய் சேராத இட்லி, தோசை, ரொட்டி, சாப்பாத்தி,  கொழுக்கட்டை ஆகியவைகளை உண்ணலாம்.
* உண்ணும் உணவில் மிளகாய்(சிவப்பு) அறவே இருக்கக் கூடாது. அவசியமானால் சில பச்சை மிளகாய்களைச் சேர்த்துக் கொள்ளலாம். காரம் தேவை என்றால் மிளகைத்தான் பயன்படுத்த வேண்டும். வடை, போண்டாக்களில் கட்டாயம் மிளகு இருக்க வேண்டும். இஞ்சியும், மிளகும் சேர்ந்த அரிசிப் பொங்கல் மிகச்சிறந்த உணவு. முழுமையான சத்துள்ள உணவு. அதில் உடலின் எதிரிகளே இல்லை.
* பொரித்த அப்பளம் கூடாது. சுட்ட அப்பளம் சிறந்தது. கரி அடுப்பில்தான் அப்பளம் சுட வேண்டும்.
* தினசரி உணவில் பருப்புச் சேர்க்கக் கூடாது. வாரத்தில் இரண்டு நாள்தான் பருப்புச் சேர்க்க வேண்டும். அதாவது இரண்டு நாள்தான் சாம்பார், ரசம் வைக்கலாம். மற்ற நாட்களில் மோர்க் குழம்பு, மிளகு ரசம், எலுமிச்சை ரசம் சேர்க்க வேண்டும்.
* மதிய உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் முழுச் சாப்பாடு சாப்பிடலாம். பருப்புச் சாதம், மோர் சாதம் என்று பலவகையாக அது இருக்க வேண்டும். அல்லது வற்றல் குழம்பு சாதம், மோர் சாதம் என்றும் இருக்கலாம். கட்டாயம் கீரை இருக்க வேண்டும். தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். ஏதாவது ஒரு கடலை சுண்டல் உணவில் இருப்பது நல்லது.
* மாலை நேரம் நவதானியங்களை முளைகட்டி சுண்டல் செய்து சாப்பிடலாம். ரஸ்க், பன், கார்ன்ப்ளாக், ஓட்ஸ் இது போன்ற ஏதாவது எண்ணெய் இல்லாத ஓர் அயிட்டத்தை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். 
எளிய யோசனைகள்
* சிறிய தேங்காய்த் துண்டுகளை தயிரில் போட்டு வைத்தால் தயிர் புளிக்காமலிருக்கும்.
* வாடிய காய்கறிகளை எலுமிச்சை சாறு கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்தால் பசுமையாக மாறிவிடும்.
* கீரையை வேகவைக்கும் போது சிறிது சர்க்கரையைப் போட்டால் அதன் பசுமை மாறாமலிருக்கும்.
* தக்காளிப் பழங்களை சிறிது உப்புக் கரைத்த நீரில் போட்டு வைத்தால் பழம் கெடாது.
* இட்லி மாவில் காம்பு கிள்ளாத வெற்றிலையைப் போட்டு வைத்தால் மாவு புளிக்காமல்  இருக்கும்.

Tips Tips...Part 3

* அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும்.
* இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது.
* ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது.
* கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும்.
* எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது.
* குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட வேண்டும்.
* காரம், புளி, உப்பு மிகக் கெடுதல் குறைத்து கொள்வது நல்லது.
* தேங்காய் வெந்தால் கொழுப்புக் கூடும். பச்சையாக உபயோகித்தால் கூடுதலாக இருக்கிற கொழுப்பு வெளியேறி சமநிலைக்கு வந்துவிடும்.
* பொரித்த பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.
* வெள்ளைச் சர்க்கரை கெடுதல் தரும். வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்ப்பது நல்லது.
* அரிசியோடு சோளம், கேழ்வரகையும் சேர்த்து இட்லி தயாரித்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.
• காய்கறிகள், கீரை வகைகளை கூடுதலாக எடுத்துக் கொண்டு உணவை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

டிப்ஸ்.......டிப்ஸ்.......டிப்ஸ்

* வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதைத் தடுக்கலாம்.

* ஆசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

* சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

* எரிந்து கொண்டிருந்கும் பல்வின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை வரவும்

* மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது, மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும், இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.

* மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால், மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.

* வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறியிருந்தால் பாலிஷ் ரிமூவரால் அழுத்தித் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.

* வீட்டு அடுக்களையில் ஒரு டம்ளரில் மண் வைத்து அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஊன்றி வைத்தால் துளிர்விட்டு வளர்ந்ததும் அதன் வாடைக்குப் பல்லி அறவே வராது.

* சட்டைக் காலரில் ஏற்படும் அழுக்கைத் தடுக்க ஷாம்பு கொஞ்சம் அந்த இடத்தில் தடவி பிரஷ்ஷால் தேய்த்தால் அழுக்கு எளிதில் நீங்கிவிடும்.

* வீட்டிலுள்ள காலாவதியான ஆயின்மெண்ட்களை தூக்கி எறியாமல் ஷுக்களின் மேல் நன்கு தடவி அழுத்தித் தேய்த்தால் ஷு பளபளக்கும்.

வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய்


வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவ
தும் தயிராக மாறியிருக்கும்.
 
இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.
 
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.

நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக்.
நெய்யில் Saturated fat - 65%

Mono - unsaturated fat - 32%

Linoleic - unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
நெய் உருக்கி மோர் பெருக்கி....
 
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
 
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
* ஞாபக சக்தியை தூண்டும்
* சரும பளபளப்பைக் கொடுக்கும்

* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...
இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக
 
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.

டிப்ஸ் டிப்ஸ்- Part 13

* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள். கொப்பளம் ஏற்படாது.

* தேவைக்கு அதிகமாக இஞ்சி இருந்தால் அதை மண்ணில் புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும் போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.

* பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க அதை இரண்டிரண்டாக நறுக்கி வைத்து விடுங்கள்.

* உருளைக் கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.

* முதல்நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை வரையில் வதங்காமல் இருக்க வேண்டுமா? பூவை ஈரத் துணியில் சுற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை நன்றாகக் கழுவிவிட்டு அந்தப் பாத்திரத்திற்குள் பூவை வைத்து மூடிவையுங்கள். பூ வாடாமல் வதங்காமல் வைத்த மாதிரியே இருக்கும்.

* ஜாம் பாட்டிலில் ஜாம் தீர்ந்து போனால் அதில் பாலை ஊற்றுங்கள். பாட்டிலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாம் பாலுடன் கலந்து கரைந்துவிடும். பிறகு அந்தப் பாலை அருந்தினால் சுவையாக இருக்கும். ஜாம் வீணாகாது.

* வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த ஜவ்வரிசியைச் சாதம்போல் வேகவைத்து மோரில் கரைத்து உப்புப்போட்டுச் சாப்பிட வயிற்றுப்போக்கு நிற்கும். வயிற்று வலியும் இருக்காது.

* குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு 5 மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.

* பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கிக் கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து

குடித்துவர அல்சர் சீக்கிரமே குணமாகும்.

* தேனில் நெல்லிக்காய்ப்பொடி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்கவே இருக்காது.

* மூட்டு வலி, முழங்கால் வலியைக் குறைக்க முடக்கத்தான் கீரை, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துத் தோசை மாவில் கலந்து தோசை வார்த்துச் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

* மாதுளம் பழச்சாறுடன் இஞ்சிச்சாறு, தேன் கலந்து மூன்று வேளையும் அருந்தி வர வறட்டு இருமல் நீங்கும். தொண்டைக்கும் இதம் கிடைக்கும்.

* தக்காளியைச் சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும்.

* சொறி, வேர்க்குரு வராமல் தடுக்க பாசிப்பயறு, மஞ்சள் தூள், வேப்பிலையை மைபோல் அரைத்து உடலில் பூசி 10 நிமிடம் கழித்துக் குளித்து வாருங்கள். சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... Part -12

*  கத்திரிக்காயை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்தால் கத்தரிக்காய் நன்றாக குழையும்.

* கோஸ் பொரியல் செய்யும்போது சிறிதளவு பால் சேர்த்தால் கெட்ட வாடை வராது. பொரியலும் ருசியாக இருக்கும்.

* பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிசறி வைத்து சிறிது புளித் தண்ணீர் தெளித்து கலந்து வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்து வதக்கினால் கசப்பே இருக்காது.

* தாளிக்கும் எண்ணெய்யிலேயே சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய்கறிகளைப் போட்டு வதக்கினால் அவை நல்ல நிறத்துடன் இருக்கும்

* புளித்த தோசை மாவில் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்த பணியாரம் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
பிரிட்ஜில் வாழைப்பழத்தையும் உருளைக்கிழங்கையும் வைக்கக்கூடாது.

* குழம்போ, பொரியலோ அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லியை போடக்கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும்போது, குலாம்ஜாமூன் பொரிக்க எண்ணெய் நன்றாக காயக்குடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்ககூடாது.

* ரசம் அதிகமாக கொதிக்கக் கூடாது..

* வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்கவேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஊற வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.