Tuesday, November 20, 2012

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட... Tips -Part 8


இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட...
தேங்காய் நார் : தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல், வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள், வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. எவ்வாறென்றால், இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.
ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து, மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா? என்று கேட்கலாம். இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும்.
ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.
கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.

சொசுக்களை விரட்ட


சொசுக்களை ஒழிக்க முடியாது.
 ஆனால் விரட்ட முடியும். (டிவிட்டர்ல இல்லங்க, இது நிஜ கொசு). பலப்பல புதிய மருந்துகள், வேப்பரைசர்கள் கொசு விரட்டுவதற்கு வந்தாலும், நான் சொல்லப் போகும் இந்த முறை, மிகவும் எளிமையானது, பண செலவு இல்லாதது, ஆனால் வலிமையானது.

ஒரு (சூப் சாப்பிடுகிற) கோப்பை எடுத்து நீரை 3/4 அளவுக்கு ஊற்றவும். அதில், பத்து சிறிய வில்லை சூடத்தை (கற்பூரங்க நீங்க) நீரில் மிதக்கவிடவும். கொசுக்கள் அடிக்கடி, அதிகமாக புழங்கும் இடத்தில் அந்த கோப்பையை வைத்துவிடவும்.

கொசு அண்டவே அண்டாது. இது tried and tested method. கண் கூடாக செய்து பார்த்து வெற்றி பெற்றதால் சொல்கிறேன். 1 வாரம் கழித்து, சூடம் கறைந்து நீரில் எண்ணெய் மிதந்தால், கோப்பையை கழுவி, புதிதாக நீர் மற்றும் புதிய சூடம் மாற்றவும். இதனை யாரேனும் முன்னமே சொல்லியிருக்கலாம். நான் தற்போதுதான் கண்டேன். அனுபவத்தில் உணர்ந்தேன்.

கொசுவுக்கு தெரியும் கற்பூர வாசனை. செய்து பார்த்துவிட்டு, ஒரு வாரம் கழித்து மறக்காமல் கமெண்ட் செய்யவும். அனுபவத்தை பகிரவும்