Thursday, June 8, 2017

தமிழரின் வாழ்வியல் vs தமிழரின் கலாச்சாரம்/பண்பாடு:



தமிழரின் வாழ்வியல் 
தமிழரின்  கலாச்சாரம்/பண்பாடு:

வாழ்வியல் vs கலாச்சாரம்/பண்பாடு:

வாழ்வியல்\lifestyle:  என்பது  ஒரு Ideology\set  of  rules , நாம் வாழும் வழி ....இப்படி தான்  வாழவேண்டும் என்று வகுத்து வாழ்வது...example: பக்தி , வீரம் , அரசு முறை , கல்யாணம், கூட்டு குடும்பம் , மருந்து, உணவு ..etc ...
இதில்  முக்கியம் பக்தியும், சிற்பம் , வீரம் , காதல் , விழா & விருந்து....

தமிழ்மக்கள் இருக்கும் இடங்களில் எல்லா மாதம்  ஒரு விழா இருக்கு, முக்கியமாக எல்லா பௌர்ணமியும் விழா தான், அந்த விழாவில்,பத்தி,  இலக்கியமும் , உணவும் கண்டிப்பாக இருக்கும்,....சித்திரை பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு , ஆணி  தேர் , இப்படி எல்லா மாசமும் .... 


கலாச்சாரம்/பண்பாடு culture : என்பது ஒரு பகுதிக்கு பகுதி மாறுபடும், நெல்லையில் இருப்பது , திருச்சில் இருக்காது, விழுப்புரத்தில் இருப்பது  மதுரையில் இருக்காது ...

பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு, பரம்பரை வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு. மொழி வளம் , உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.



தமிழரின் பண்டைய பண்பாடு இன்று தலைமாறிவிட்டது. ஏனெனில், தமிழர் வாழ்க்கையில் ஆரியப் பண்பாடு பெருமளவும், ஆங்கிலப் பண்பாடு ஓரளவும் பின்னிப் பிணைந்து விட்டன. ஆகவே, தமிழர் பண்பாட்டைத் தனிமைப் படுத்திக் காண்பது ஒவ்வாத ஒன்றாகிவிட்டது. இந்தியத் தேசியத் தலைவர்கள் எனப்படும் தமிழர், குமரி முதல் பனிமலை வரை பரவியுள்ள நாகரிகம் "பாரத நாகரிகம்" என்றும் நாம் யாவரும் இந்தியர் என்றும் ஒருமைப்பாடு உரைக்கின்றனர்.