மலர் மருத்துவம்
* மல்லிகை மலரை எண்ணெய்யிலிட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்து வர தலைவலி, கண் எரிச்சல் நீங்கும்.
* புளியம்பூவை நெய் விட்டு வதக்கித் துவையல் செய்து சாப்பிட பித்த வாந்தி தீரும்.
* கரப்பான், சொறி, சிரங்கு இவற்றுக்கு புன்னை மலரை அரைத்துப் பற்றுப் போட்டு வர குணமாகும்.
* வாழைப்பூ குடல் புண், சீதபேதி, மூலம் சம்பந்தமான நோய்களைத் தீர்க்க வல்லது.
* மாம்பூவை நீரிலிட்டுக் காய்ச்சி அந்த நீரால் வாய் கொப்பளித்தால் பல் நோய்கள் தீரும்.
* நீரிழிவு நோய்க்கு அல்லி மலர் கஷாயம் சிறந்த மருந்தாகும்.
(மலர்களின் மருத்துவம் என்ற நூலிலிருந்து)
நெ.இராமன், சென்னை.
சமையல் டிப்ஸ்
* கீரையை வேக வைக்கும்போது கொஞ்சம் எள் சேர்த்து வேக வைத்தால் கீரை நிறம் மாறாமல் பசுமையாக இருக்கும்.
* காய்கறிகளின் தோலை ஒட்டித்தான் அவற்றின் சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதனால் தோலைச் சீவும் போது மிகவும் லேசாகச் சீவ வேண்டும்.
அழகு டிப்ஸ்...
* சில துளிகள் பாதாம் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு இரண்டையும் கலந்து முகத்தில் மென்மையாகத் தடவிக் கொள்ளுங்கள். பதினைந்து நிமிடம் கழித்துக் குளித்தால் முகச் சருமம் பட்டுப் போல மென்மையாக இருக்கும்.
* கொஞ்சம் பாலை எடுத்து அதில் எலுமிச்சைச் சாற்றைச் சில துளிகள் பிழிந்து கலந்து முகம் பாதங்கள், கைகள், கழுத்து முதலிய இடங்களில் தடவிக் கொண்டு பதினைந்து நிமிடங்கள் கழித்துக் குளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் சருமம் ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் எடுப்பாகவும் இருக்கும்.
* தினமும் தூங்கப் போவதற்கு முன்பு தேயிலை தண்ணீர் கொண்டு கண்களைச் சுற்றி கழுவி வந்தால் சுருக்கம், கறுப்பு வளையம் நீங்கி பளபளப்பு உண்டாகும்.
* பாதாம் பருப்புகளை தோலுரித்து நன்றாக அரைத்து முட்டையின் வெள்ளைக் கருவையும் சில சொட்டு எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து முகத்தில் தடவி ஊறிய பின் முகத்தை அலம்பினால் முகத்திலுள்ள கரும்புள்ளி, செம்புள்ளி மறைந்துவிடும்.
* வெள்ளரிக்காயைத் துருவி சாறு பிழிந்து எண்ணெய் பசை, நார்மல் சருமம் உள்ளவர்கள் தடவி வந்தால் சருமத்தில் இருக்கும் நுண்ணிய துவாரங்கள் சுத்தமாகும்.
* பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊற வைத்து காலையில் நன்றாக அரைத்து தேய்த்து வர, முகம் சிவப்பழகு கிடைத்துவிடும்.
* நல்ல சந்தனத்தில் ஜாதிக்காயைப் போட்டு அரைத்து முகத்தில் தடவி வந்தால் பருக்கள் மறைந்து முகம் பளபளக்கும்.
எந்த நேரத்தில் என்னென்ன சாப்பிட வேண்டும்?
* தயிரைத் தயிராக உண்ண ஒரு பக்குவம் இருக்கிறது. முப்பது வயதுக்கு மேல் தயிரை மோராக்கித்தான் உண்ண வேண்டும். அந்த வயதுக்கு மேல் நிறைய மோரே சாப்பிட வேண்டும். தயிரைச் சாப்பிடுவதானால் அதை ரசம், குழம்பு, சாதம் சாப்பிட்ட பின் கடைசியாக உண்ணக் கூடாது. தயிரை காலையில்தான் உண்ண வேண்டும்.
காலையில் வெறும் தயிரில் லேசாக உப்புச் சேர்த்து ஸ்பூனால் எடுத்து விழுங்கலாம். இட்லியில் தோய்த்து உண்ணலாம். ரொட்டிக்குப் போட்டு கொண்டால் உப்புத் தேவையில்லை. ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
இரவில் தயிர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மோர் சேர்த்துக் கொள்ளலாம். இரவு வெறும் மோர் சோறும், பழங்களும் போதும். இரவில் பலகாரங்களை உண்ணக் கூடாது. பழங்கள் நல்ல இரவு ஆகாரம்.
* காலையில் முழுச்சாப்பாடு சாப்பிடக் கூடாது. அப்போது ஆவியில் அவித்த அல்லது அதிகம் எண்ணெய் சேராத இட்லி, தோசை, ரொட்டி, சாப்பாத்தி, கொழுக்கட்டை ஆகியவைகளை உண்ணலாம்.
* உண்ணும் உணவில் மிளகாய்(சிவப்பு) அறவே இருக்கக் கூடாது. அவசியமானால் சில பச்சை மிளகாய்களைச் சேர்த்துக் கொள்ளலாம். காரம் தேவை என்றால் மிளகைத்தான் பயன்படுத்த வேண்டும். வடை, போண்டாக்களில் கட்டாயம் மிளகு இருக்க வேண்டும். இஞ்சியும், மிளகும் சேர்ந்த அரிசிப் பொங்கல் மிகச்சிறந்த உணவு. முழுமையான சத்துள்ள உணவு. அதில் உடலின் எதிரிகளே இல்லை.
* பொரித்த அப்பளம் கூடாது. சுட்ட அப்பளம் சிறந்தது. கரி அடுப்பில்தான் அப்பளம் சுட வேண்டும்.
* தினசரி உணவில் பருப்புச் சேர்க்கக் கூடாது. வாரத்தில் இரண்டு நாள்தான் பருப்புச் சேர்க்க வேண்டும். அதாவது இரண்டு நாள்தான் சாம்பார், ரசம் வைக்கலாம். மற்ற நாட்களில் மோர்க் குழம்பு, மிளகு ரசம், எலுமிச்சை ரசம் சேர்க்க வேண்டும்.
* மதிய உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் முழுச் சாப்பாடு சாப்பிடலாம். பருப்புச் சாதம், மோர் சாதம் என்று பலவகையாக அது இருக்க வேண்டும். அல்லது வற்றல் குழம்பு சாதம், மோர் சாதம் என்றும் இருக்கலாம். கட்டாயம் கீரை இருக்க வேண்டும். தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். ஏதாவது ஒரு கடலை சுண்டல் உணவில் இருப்பது நல்லது.
* மாலை நேரம் நவதானியங்களை முளைகட்டி சுண்டல் செய்து சாப்பிடலாம். ரஸ்க், பன், கார்ன்ப்ளாக், ஓட்ஸ் இது போன்ற ஏதாவது எண்ணெய் இல்லாத ஓர் அயிட்டத்தை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
எளிய யோசனைகள்
* சிறிய தேங்காய்த் துண்டுகளை தயிரில் போட்டு வைத்தால் தயிர் புளிக்காமலிருக்கும்.
* வாடிய காய்கறிகளை எலுமிச்சை சாறு கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்தால் பசுமையாக மாறிவிடும்.
* கீரையை வேகவைக்கும் போது சிறிது சர்க்கரையைப் போட்டால் அதன் பசுமை மாறாமலிருக்கும்.
* தக்காளிப் பழங்களை சிறிது உப்புக் கரைத்த நீரில் போட்டு வைத்தால் பழம் கெடாது.
* இட்லி மாவில் காம்பு கிள்ளாத வெற்றிலையைப் போட்டு வைத்தால் மாவு புளிக்காமல் இருக்கும்.
No comments:
Post a Comment