Tuesday, February 7, 2012

தச வாயுக்கள் - 10 வாயுக்கள்

பஞ்சபிராணன்கள் என்று சொல்லப்படும் பிராணன் அபானன் , உதானன், சமானன், வியானன். ஐந்து வாயுக்களும் மிக  முக்கியமானவைகளாகும். .


பிராணவாயு : 
இதன் இருப்பிடம் இருதயம் . இருதயத்தின் இயக்கக் கட்டுப்பாடு இரத்தத்தை அடித்து வெளித்தள்ளி உடலின் ஒவ்வொரு செல்களுக்குள்ளும், செலுத்துதல் .பசி, தாகங்களை 
உண்டாக்கி சாப்பிட்ட ஆகாரத்தை செரிக்கச் செய்தல் இவ்வாயுவின் பணி.

அப்பான வாயு: 
மூலாதாரமாகிய குதத்துக்கும், குய்யத்துக்கும். இடைப்பட்ட பிரதேசத்தில் இருந்து மலத்தையும், சிறுநீரையும் வெளியேற்றுதல் மற்றும் சுக்ல சுரோணிதமாகிய விந்து நாதத்தை வெளியேற்றுதல் இதன் பணி.

உதான வாயு: 
இது தொண்டைப் பகுதியில் இருந்து சாப்பிடும் பதார்த்தங்களை விழுங்கி ரசம், ரத்தம், தசை, எழும்பு, மஜ்ஜை, கொழுப்பு, விந்து நாதமாகவும், பிரித்த பிறகு, மலக்கழிவை மலப்பையில் தள்ளும்.

சமான வாயு: 
இந்த வாயு நாபிக் சக்கரம் எனும் பசி, தாகம், செரிமானம், உடலின் சூடாகிய 98.4' F ஆகியவற்றைச் சரிசெய்யும்.

வியான வாயு : 
இவ்வாய்வு உடலெங்கும் நிறைந்து இருந்து உடலின் மேல் விழும் தோல்உணர்சிகளாகிய ஸ்பரிசம் உணர்வை உணர்வதற்கு உதவி செய்கிறது.


நாகன் வாயு: 
இவ்வாயு: தொண்டைப்பகுதியில் இருந்து வாந்தி உணர்ச்சி, வாந்தியை உண்டு பண்ணும்.

கூர்மன் வாயு: 
இது கண்களிலிருந்து கண்களைத் திறந்து மூடவும், கண்ணீர் போன்றவற்றிக்கும் காரணமாக இருக்கிறது.

கிருகரன் வாயு: 
இவ்வாயு மூக்கிலிருந்து வாசனை நுகர்வதற்கும், தும்மலை உண்டாக்கவும் 

தேவதத்தன் வாயு: 
இவ்வாயு மார்பில் இருந்து கொண்டு கொட்டாவியையும், விக்கலையும். உண்டாக்கும்.

தனஞ்ஜயன் வாயு: 
இது தாயின் கர்ப்பத்தின் இருக்கும் சிசுவை வெளித்தள்ளும். மேலும் தசவித வாயுக்களில் 
தனஞ்சய வாயுவைத் தவிர மற்ற வாயுக்கள் எல்லாம் மரணத்தின் போது பிராணனுடன் 
சேர்ந்து உடனே வெளியேறிவிடும். இந்த தனஞ்சய வாயு உடனே வெளியேறாமல் உடம்பை.
வீங்கச் செய்தல். நவதுவாரங்களில் நுரை, நீர் வரச்செய்தல், உடம்பைப் நாற்றம் எடுக்கச் செய்தல் போன்றவற்றைச் செய்து கொண்டே இருக்கும். உடம்பை இடுகாட்டிற்குக் கொண்டுபோய் தீ மூட்டியவுடன் பாதி உடம்பு வெந்த பிறகு 'டப்' என்ற சப்தத்துடன் வெடித்துத்தான் போகும்.

---உடம்பை எரியூட்டாமல் புதைத்தால் உடம்பை மண்ணோடு மண்ணாகச் செய்து பிறகுதான் தனஜய வாயு வெளியேறும்.

---இறந்த நபரை உயிருடன் மீண்டு வரச் செய்த யோகிகள் இந்த தனஜய வாயுயின் உதவி கொண்டுதான் அப்படிச் செய்துள்ளார்கள்.


---ஜீவசமாதி எய்திய யோகியின் உடலில் இருந்து இந்தப் பத்துவித 
வாயுக்களுமே வெளிவருவது இல்லை.

No comments:

Post a Comment