சுவர்க்கம் - நரகம் என்பது எதோ மேல் உலகில் உள்ளது போல எல்லா மதங்களிலும் கூறப் பட்டுள்ளன.ஆனால் இன்பம் மற்றும் துன்பம் அனைத்தையும் அனுபவிப்பது நமது உடலுடன் சேர்ந்த ஆன்மாவே. இந்த உடலை விட்ட பின்னர் இந்த ஆன்மா எந்த இன்பத்தையோ அல்லது எந்த துன்பத்தையோ எதன் மூலம் அனுபவிக்கும். இந்த தூல உடலுக்கு மட்டுமே வலியும், சந்தோஷமும். தூலம் விட்ட பின்னர் எவ்வளவு உணவு வைத்தாலும்எப்படி சாப்பிட முடியும். எத்தனை அழகான பெண் இருந்தாலும் எப்படி ரசிக்க முடியும். நெருப்பிலே போட்டு எரித்தாலும் எப்படி நமக்கு வலிக்கும்.நமக்கு தேகம் என்று ஒன்று இருந்தால் மட்டுமே அது வேகும்.ஆன்மா எப்படி வேகும். ஆக சுவர்க்கம் மற்றும் நரகம் என்பதுநம் உடலை விட்ட பிறகு ஏற்படுவதல்ல. இந்த உடல் இருக்கும் போதே அதை அடைவதுதான்.முதலில் நரகம் என்றால் என்ன ?நர + அகம் = நரகம் நரர்களாகிய மனிதர்கள் வாழ்கின்ற இந்த இடம் தான் நரகம். அதாவது நாம் நரன் என்னும் மனித தரத்துடன் வாழ்வது நரகம்.நரன் நிலையை விட்டு இறை நிலையை அடைவதுதான் சொர்க்கம். அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே சுவர்க்கம் எனப்படும்.
No comments:
Post a Comment