மலர்களின் மகத்துவம்!
''மனிதர்கள் எப்போதும் மனநிலையைச் சமமாக வைத்துக்கொள்ளத் தெரியாமல் குழம்புகிறார்கள். அவர்கள் மலர்களோடு தங்கள் நேரத்தைச் செலவிடலாம். ஏனெனில், மலர்களுக்கு அமைதிப்படுத்தும் இயல்பு உண்டு. 'எனக்கு எவ்ளோ பிரச்னை தெரியுமா?’ என்று சின்ன விஷயத்துக்காகக்கூட அதிகமாக அலுத்துக்கொள்ளும் மனநிலையை மாற்றும் தன்மை ரோஜாவுக்கு உண்டு. புதிய சூழ்நிலைக்குத் தன்னை மாற்றிக்கொள்ள முடியாத மனநிலையை, வால்நட் மலர் மாற்றி அமைக்கும். 'கோபத்தைக் குறைப்பதில் முதல் பரிசு தாமரைக்குத் தரலாம்’ என்கிறார் அன்னை. பரந்து விரிந்த மனநிலையை உருவாக்கும் சக்தி சூரியகாந்திப் பூவுக்கு உண்டு. துளசி, அர்ப்பணிப்புக் குணத்தை அதிகரிக்கும். மல்லிகை, பணிவைக் கூட்டும். பெகோனியா, ஆறுதல் கொடுக்கும். உதவும் குணத்தை அவரைப் பூ அளிக்கும். கொய்யாப் பூ அமைதி தரும். பாரிஜாதம், மகிழ்ச்சிக்கானது'' என்கிறார் விஜய கிருஷ்ணன்.
மலர்கள் என்றாலே மகிழ்ச்சிதானே!
No comments:
Post a Comment