Friday, May 18, 2012

ஒரு பேட்டி....


கவிஞர் வைரமுத்து. "உங்கள் துறையில் வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?” என்று கேட்டேன்.
"என்னுடைய பார்வையில் வெற்றி என்றும் தோல்வி என்றும் ஒன்று கிடையாது. அது உங்கள் பார்வைதான். இந்த வருடம் எனக்குத் தேசிய விருது கிடைத்தது உங்கள் பார்வையில் வெற்றியாகக் கருதினால், அடுத்த வருடம் எனக்குக் கிடைக்க£மல் போனால், அது தோல்வியாகக் கருதப்படலாம். என்னைப் பொறுத்தவரை இவை இரண்டுமே இரு வேறு சம்பவங்கள். வாழ்க்கை என்பது சம்பவங்களால் ஆனது. அவ்வளவுதான்!'' என்றார்.

கெவின் கேர் நிறுவனத்தின் எம்.டி. ரங்கநாதன் ஒரு விஷயம் சொன்னார்... "நீங்கள் செய்துகொண்டு இருக்கிற வேலைகள் எதுவுமே உங்களின் முழு ஈடுபாட்டோடு நடக்கவில்லை என்றால், நீங்கள் தேடிக்கொண்டு இருப்பது இதுவல்ல. முதலில், உங்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடியுங்கள். அதைவிட முக்கியமானது, இப்போது செய்துகொண்டு இருக்கும் வேலையை இன்னும் ஈடுபாட்டோடு செய்யுங்கள். அந்த பேலன்ஸ் ரொம்ப முக்கியம்!''

ஏ.ஆர்.முருகதாஸை:"எட்டு வருஷம் போராடி இருக்கீங்க. 'போதும்டா சாமி. ஊருக்குப் போயிடலாம் என்று தோன்றியது இல்லையா?'' என்று கேட்டேன். "போயிருக்கலாம். ஆனா, எனக்கான கதவு நாளைக்குத் திறக்கலாம். நான் இன்னிக்குப் போயிட்டேன்னா, என்னோட எட்டு வருஷ உழைப்பு போச்சே!'' என்றார்.

கோபிநாத்: உங்கள் இலக்கு ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதாக இருக்கலாம். இப்போது நீங்கள் அந்த இடத்தைத் தொடுவதற்கான எந்தத் தடயமும் தெரியாமலும் இருக்கலாம். அதற்காக உங்கள் சாம்ராஜ்ய தாகத்தை தணித்துக்கொள்ளாதீர்கள். செய்கிற வேலையை ஈடுபாட்டோடு செய்துகொண்டே இருங்கள்.
'எதுவுமே செய்வதற்குத் தகுதியான வேலைதான், அதனை ஈடுபாட்டோடு செய்கிறபோது!' என்று சொன்ன மார்ட்டின் லூதர் கிங், 'நீ தெருவைச் சுத்தம் செய்கிறவனாக இருந்தாலும், அதனை நேர்த்தி யோடும், ஈடுபாட்டோடும் செய்! சுத்தமாக இருக்கும் தெரு உன்னைக் கவனிக்க வைக்கும். உன்னைப்பற்றிப் பேசவைக்கும்!' என்கிறார்.
இப்போது என்ன வேண்டுமானாலும் செய்துகொண்டு இருங்கள். உங்கள் இலக்கை நோக்கிய பயணம் ஈடுபாட்டோடு இருக்கட்டும்.

இளையராஜாவின் :'திட்டமிட்டு எதையும் நான் செய்யறது இல்லை. திட்டம் போட்டு நடக்கணுங்கிறது நம்ம கையிலா இருக்கு? நமக்கு விதிச்சது இல்லாமல் எதுவும் நடக்காது. 'அன்னக்கிளி' ஆரம்பிச்சு 25 படம் வரைக்கும் பிளான் பண்ணி மியூஸிக் போட்டிருக்கலாம். அப்புறம் ஆன்மிகம், தெய்வ நம்பிக்கைன்னு வந்த பின்னாடி, எல்லாமே அன்னன்னிக்கு வந்த விஷயம்தான். How to name it, Nothing but wind, திருவாசகம் எல்லாமே தானாக நிகழ்ந்ததுதான். காற்றுபோல, ஒளிபோல இசையும் பரவி யாரையாவது, எங்கேயாவது போய் அடைஞ்சுக்கிட்டே இருக்கணும். கொட்டுகிற இசை மழை யில் எங்கேயாவது, யாராவது துளிர்க்கணும்... பூக்கணும். அடையாளம் தெரியாத இந்தப் பயணத்தை இசை செய்துக்கிட்டே இருக்கணும். நொடிக்கு நொடி என்னைப் புதுப்பிச்சுக்கிட்டு இத்தனை வருஷமா இயங்கிட்டு இருக்கேன். இப்படிப்பட்ட நல்ல சூழலில் என்னை இறைவன் வைத்திருக்கும்போது, நான் நிறைவாக உணர்வது தானே நியாயம்?
நமக்குத் தெரிஞ்ச இசையை இளைஞர்களுக்குக் கொடுத்துட்டுப் போகணும்னு மட்டும் தோணுது. அதற்குச் சூழல் அமையணும். நான் எடுத்துட்டுப் போக ஒண்ணுமே இல்லை. கொடுத்துட்டுப் போகத்தான் இருக்கு. எனது அனுபவத்தைப் பகிரவும் இளைய தலைமுறைக்கு விட்டுட்டுப் போகவும் தயாரா இருக்கேன். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து இளைஞர்களை இசை மூலமா ஒன்றிணைக்கணும். பார்க்கலாம், என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!''

No comments:

Post a Comment