Thursday, December 29, 2011

கா‌சியாத்திரை


கா‌சியாத்திரை துவ‌ங்கும் முன் நாம் இராமேஸ்வ‌ர‌ம் சென்று அங்கு ம‌ண் எடுத்துக் கொண்டு திருவேணி சங்க‌‌ம‌த்தில்(அலகாபாத்) கொண்டு சேர்க்க‌ 
வேண்டும்.அங்கிருந்து காசி சென்று கங்கையில் நீராடி
காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு,காலபைரவர், பிந்துமாதவர் எல்லோரையும் தரிசித்து மீண்டும் 
அலகாபாத் சங்கமத்தில் கங்கை நீரை எடுத்துக்கொண்டு இராமேஸ்வரம் வந்து அந்தப் புனித நீரால் இராமநாதருக்கு அபிடேகம் செய்தல் வேண்டும். அப்போதுதான் காசியாத்திரை நிறைவு பெறும்.

ஸ்ரீராம‌கிருஷ்ண‌ர்...
"நீங்க‌ள் க‌ங்கையில் இற‌ங்கிய‌வுட‌ன் உங்க‌ள் பாவ‌மெல்லாம் உங்க‌ளுடைய‌ உட‌லைவிட்டுக் கிள‌ம்பி க‌ரையிலுள்ள மரங்களில் போய் அமர்ந்து கொண்டு நீங்கள் வெளியில் வரக்  காத்திருக்கும்.நீங்கள் நீரில் இருந்து வெளியில் வந்தவுடன் உங்கள் உடலுக்குள் புகுந்துவிடும்" என்றார்.என்ன பொருள்? உண்மையான மனமாற்றம் இல்லாமல் வெறும் கங்கைக் குளியல் மட்டும் போதுமானது ஆகாது என்பதே ஆகும். 

No comments:

Post a Comment