Thursday, January 26, 2012

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம் & - சிவா ஆகமக் குறிப்புகள்


சிவா ஆகமக் குறிப்புகள்



சிவ ஆகமகுறிப்புகள்!
 
temple
1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ... மேலும்
 
temple
2.1 ஆலயக் கிரியைகள் : ஆலயங்களில் செய்யப்பெறும் கிரியைகள் முப்பெரும் பிரிவினுள் அடங்கும்; 1. கர்ஷணாதி ப்ரதிஷ்டாந்தம், 2. ப்ரதிஷ்டாதி உற்சவாந்தம், 3. உற்சவாதி ... மேலும்
 
temple
3.1 ஆலயக் கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன: 1. நித்தியக் கிரியைகள் 2. நைமித்திகக் கிரியைகள் 3. காமியக் கிரியைகள். தினந்தோறும் (குறைந்தது ... மேலும்
 
temple
4.1 முத்ரா என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற பொருள் ஸம்ஸக்ருத அகராதிகளில் காணக்கிடைக்கிறது. முத்ரா என்ற சொல் ஒரு ... மேலும்
 
temple
திருக்கோவில் நித்தியக் கிரியைகள் : ஆலயங்களில் நிகழ்வுறும் நித்தியக் கிரியைகள் நித்தியம், ஆகந்துக நித்தியம் என இரு வகைப்படும். நித்தியம் என்பது தினம் தினம் செய்யும் ... மேலும்
 
temple
உஷத்கால பூஜை : சிவாச்சாரியார், சூர்ய உதயத்துக்குக் குறைந்தது 5 நாழிகைகள் (2 மணி நேரம்) முன்பு எழுந்து வாக்கினால் தோத்திரமும் மனத்தினால் இறைவனது தியானமும் செய்துகொண்டு, ... மேலும்
 
temple
7.1 அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன.
7.2 அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, ... மேலும்
 
temple

மலர்கள்மே 20,2011

8.1 காலங்களுக்கேற்ற புஷ்பங்கள் : காலை : தாமரை, பொரசு, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம், தாழை, நண்பகல் : வெண்தாமரை, அரளி, பொரசு, துளசி, நெய்தல், வில்வம், ...மேலும்
 
temple
9.1 ஆவுடையாருக்கு வஸ்த்ரம் : காலஸந்தி பூஜையிலே வெள்ளை வஸ்த்ரமும், உச்சிகால பூஜையின்போது சிவப்பு வஸ்த்திரமும், சாயரøக்ஷ பூஜை காலத்தில் மஞ்சள் வண்ண வஸ்த்ரமும், அர்த்யாம ... மேலும்
 
temple
10.1 உபசாரங்கள் மூன்று விதம் : ஸாங்கம், உபாங்கம், ப்ரத்யங்கம். (1) ஸாங்கம் : ஸ்நானம் (அபிஷேகம்), பாத்யம், ஆசமனம், வஸ்திரம், ஆபரணம், வாஸனை, சந்தணம் பூசுதல், அர்க்யம், புஷ்பம் சாத்துதல் (2) ... மேலும்
 
temple
11.1 வண்டு மலரை முகர்ந்து தேனைப் பருகி, அந்தத் தேனை திருப்பித் தருகிறது;  மலரின் மணமோ சுவையோ தண்மையோ நீரோட்டமோ கெடுவதில்தல. அதுபோல இறைவர்க்கு நிவேதித்த பிரசாதங்களின் ரஸம் ...மேலும்
 
temple
12.1 அபிஷேகத்தில் ஆரம்பம், அபிஷேகத்தில் முடிவு, அர்ச்சனையின் முடிவு, நைவேத்யத்தின் ஆரம்பம், உத்ஸவத்தில் ஆரம்பம், உத்ஸவத்தின் முடிவு, நர்த்தனத்தின் முடிவு - இக்காலங்களில் மட்டுமே ... மேலும்
 
temple
13.1 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் ஆகிய காலங்களில் வேத கோஷம் செய்யவேண்டும்.
13.2 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் பூஜையின் முடிவு ஆகிய காலங்களில் பக்தர்கள் ஸ்தோத்ரங்கள் ... மேலும்
 
temple
14.1 எவன் பூஜையைச் செய்துவிட்டு, நிறைவாக ப்ரதக்ஷிணம் செய்யவில்லையோ அவனுக்கு அந்தப் பூஜையயின் பலன் கிடைக்காது; அவன் விளம்பரத்திற்காகவே பூஜை செய்தவனாகிறான். எனவே பூஜை நிறைவாக ... மேலும்
 
temple
15.1. பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன; 1. படைத்தல் - அபிஷேகம். 2. காத்தல் - நைவேத்யம் 3. ஸம்ஹாரம் - பலி போதல் 4. திரோபாவம் - ...மேலும்
 





சிவ ஆகமகுறிப்புகள்!
 
temple
1. பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில், இறைவனை ஆலயத்தில் வந்து தரிசிப்பது.
2. பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது
3. வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை ... மேலும்
 
temple
17.1 கோவிலுக்குள் சிவாச்சாரியாரிடம் இருந்துதான் விபூதி வாங்கிக் கொள்ள வேண்டும்; அது சிவனிடமிருந்தே பெற்றுக் கொள்வதற்குச் சமம். மற்றவரிடமிருந்து பெற்றுக் கொள்வதும், தானே ... மேலும்
 
















ஹோமம் நடத்துவது ஏன்?


ஹோமம் நடத்துவது ஏன்? காலம் மாறும்போது எல்லா துறைகளிலும் திருப்பங்கள் நிகழும். உலகில் இயற்கை சூழ்நிலைகள் மாறும். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஹோமங்களை நடத்த வேண்டும். இறைவன் ஹோமங்கள் மூலமாக நமது கோரிக்கையை அறிந்து கொள்கிறான். அக்கோரிக்கைகள் அக்னிகுண்டங்கள் மூலமாக இறைவனை சென்றடைவதாக நம்பிக்கை. எனவே தான் ஹோமம் நடத்தப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரம் பொய் ?????


சோ : ஜோதிட சாஸ்திரத்தை அப்படிச் சொல்லிவிட முடியாது. வான சாஸ்திரத்தையும் (அஸ்ட்ரானமி), கணித சாஸ்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டது ஜோதிட சாஸ்திரம். அந்த அடிப்படையில், கிரஹ சஞ்சாரங்களைக் கணித்து, பல நிகழ்ச்சிகளைக் கவனித்து, இந்த கிரஹ நிலை – இன்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று அனுபவ பூர்வமாக மிகவும் பார்த்து, ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட சாஸ்திரம் ஜோஸ்யம். வராஹமிஹிரர் என்பவர் கணித மேதை; வானசாஸ்திர நிபுணர். அவருடைய பிருஹத்சம்ஹிதை என்பது மிகவும் போற்றப்படுகிற நூல்.

உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். நான் ஜோதிடம் அறிந்தவன் அல்ல. அதைக் கற்றுக் கொள்ள முனைந்து, அதில் உள்ள நெளிவுசுளிவுகளைப் பார்த்து, மலைத்து, ‘இது நம்மால் முடிகிற காரியம் இல்லை’ என்று நான் முயற்சியைக் கைவிட்டேன். ஆனால் ஒன்று புரிந்தது.

ஜோதிடம் ஒரு சட்டம் மாதிரி. சட்டத்தில் விதிமுறை இருக்கும். ஆனால் எல்லா நேரத்திலும், எல்லா விஷயங்களிலும் அது சரி வராது. அந்த விதிமுறைக்கு விதி விலக்கு இருக்கும். விதிவிலக்கின் தன்மையை அறியாமல், விதியை மட்டும் பார்த்தால், சட்டத்தையே தவறாகப் புரிந்து கொள்ள நேரிடும். இது தவிர, சட்டத்தின் ஒரு பிரிவு சொல்வதை, மற்றொரு பிரிவு மறுப்பது போல இருக்கும். ஆழ்ந்து பார்த்தால் அந்த இரண்டு பிரிவுகளுக்கிடையே இருப்பது முரண்பாடு அல்ல, சூழ்நிலைகளின் வேறுபாடுக்கிணங்க, விதிக்கப்பட்டிருக்கிற மாறுபட்ட விதிகள் என்பது புரியும்.

சட்டத்தில், ஒரு அணுகுமுறை முக்கியமானது. ஒரு சட்டத்தை, அர்த்தம் செய்து கொள்கிறபோது – அதில் ஒரு பிரிவு சொல்வதை, இன்னொரு பிரிவின் மூலம் அர்த்தமற்றதாகச் செய்ய முனையக் கூடாது. அம்மாதிரி முரண்படுகிற தோற்றமுள்ள பிரிவுகளை, ஒன்றுக்கொன்று ‘ஹார்மனைஸ்’ செய்ய வேண்டும். அதாவது, அம்மாதிரி பிரிவுகள் ஒன்றுக்கொன்று பொருந்தும்படியாக அர்த்தம் செய்ய வேண்டும். இப்படி சட்ட விளக்கத்தில் பல நுணுக்கங்கள் உண்டு. இதைத் தவிர, ஏற்கெனவே தீர்மானம் ஆகிய விளக்கங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

ஜோதிடத்திலும் இம்மாதிரி நிறைய நுணுக்கங்கள் இருக்கின்றன. அவற்றை அறியாமல், மேலெழுந்த வாரியாகப் பார்க்கிறவர்கள் சொல்கிற ஜோதிடம், குருட்டாம் போக்கில் பலித்தால்தான் உண்டு. ஒரு விதி; அதற்குப் பல விதிவிலக்குகள்; அந்த விதிவிலக்கின் ஆதிக்கம் பெறுவதற்கு வேறு சில நிபந்தனைகள்; அந்த நிபந்தனைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள சில நியாயங்கள்… என்று ஜோதிட சாஸ்திர பொருள் அறிகிற வேலை, ரொம்பவும் சிக்கலானது. இவை எல்லாவற்றிற்கும் கணக்குகள் வேறு!

இவ்வளவு சிரமப்பட்டுப் புரிந்து கொள்ள வேண்டிய சாஸ்திரத்தை, சரியாகக் கற்காத பல ஜோஸ்யர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போனால், விஷயம் தெரியாத டாக்டரிடம் போகிற மாதிரிதான்.

ஆனால், அப்படி விஷயம் தெரியாத டாக்டரிடம் சென்று, நோய் குணம் ஆகாமல் அவதியுறும்போது – நாம் அந்த டாக்டரைத்தான் பழிக்கிறோமே தவிர, மருத்துவ விஞ்ஞானத்தைக் குறை சொல்வதில்லை. அதே போல, ஒரு ஜோதிடரிடம் போய், அவர் சொல்லும் பலன்கள் பொய்த்துப் போகிறபோது, நாம் அவருடைய திறமையைக் குறை சொல்லலாம் – ஆனால், அவருடைய தவறுக்காக ஜோதிட சாஸ்திரத்தையே பழிப்பது தவறு.

டாக்டர்களைப் பற்றி பேசுவதால், இன்னொன்றையும் நினைத்துப் பார்ப்பது நல்லது. மருத்துவத்தில் இன்று வியாபார நோக்கம் தலைவிரித்தாடுகிறது. பல அனாவசிய டெஸ்ட்கள் மட்டுமின்றி, சில அனாவசிய ஆபரேஷன்கள் கூடச் செய்யப்படுகின்றன. காரணம், வியாபார நோக்கம்.

ஜோஸ்யத்திலும், இதே போல வியாபார நோக்கம் பரவி விட்டதால், பரிகாரங்கள் என்ற பெயரில் பல சமயங்களில் அனாவசியச் செலவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. ‘மாஸ் ஜேஸ்ம்’ என்கிற மாதிரி, இந்தச் சக்கரம், அந்தச் சக்கரம் என்ற பெயரில் தகடுகள் அடித்துத் தரப்படுகின்றன.

டாக்டர்களிடையே எப்படி நம் அனுபவத்தின் காரணமாக, சில வர்த்தக டாக்டர்களை நாம் தவிர்க்கிறோமோ, அதே போல வர்த்தக ஜோஸ்யர்களையும் தவிர்க்க வேண்டும். அதை விட்டு, ஜோதிட சாஸ்திரத்தையே பொய் என்று முடிவு கட்டுவது அவ்வளவு சரியாக இருக்காது.

வராஹமிஹிரரே, தனது ‘பிருஹத்சம்ஹிதை’ என்கிற நூலில், விவரமறியாத ஜோதிடர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதைக் கொஞ்சம் பார்ப்போம்.

நவக்கிரகங்கல் நன்மை செய்ய

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் 

உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!

வேயுறு தோளி பங்கன் - மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன்

விடம் உண்ட கண்டன் - தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால் தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை வள்ளல்

மிக நல்ல வீணை தடவி - மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு

மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து - களங்கமற்ற பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு (சந்திரன் இயற்கையாய் களங்கமுள்ளவன். அவன் ஐயன் திருமுடியில் அமர்ந்ததால் அவன் களங்கம் நீங்கி மாசறு திங்களானான்).

என் உளமே புகுந்த அதனால் - அவனாகவே அவன் அருளை முன்னிட்டு என் உள்ளத்தில் புகுந்து நிறைந்ததனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்னும் ஒன்பது கோள்களும் (பாம்பு இரண்டு ராகுவும் கேதுவும்)

ஆசறு நல்ல நல்ல - ஒரு குற்றமும் இல்லாதவை

அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - அவையெல்லாம் ஈசன் அடியவர்க்கு மிக மிக நல்லவையாகும்.

செகண்ட் ஹேண்ட் வீடு வாங்க...


செகண்ட் ஹேண்ட் வீடு வாங்க...

தமிழகத்தில் பெரிய நகரங்கள் மட்டுமல்ல, சிறிய நகரங்கள்கூட பெரியதாகவே வளர்ந்துவிட்டன. ரியல் எஸ்டேட் உச்சத்தில் இருக்கும் இந்த காலத்தில் நகரத்திற்குள் புதிய வீடோ அல்லது ஃபிளாட்டோ வாங்குவது பகல் கனவுதான். நகரத்திற்குள் வீடும் வேண்டும்; அதே நேரத்தில் குறைந்த விலையிலும் வேண்டும் என்கிறவர்களுக்கு ஒரே வழி, பழைய வீடுகளான செகண்ட் ஹேண்ட் வீடுகளை வாங்குவதே!

சென்னை போன்ற பெருநகரங்களில் பழைய வீடு என்றால் அடுக்குமாடி குடியிருப்புகளே முதலில் நம் நினைவுக்கு வரும். இங்கு அபார்ட்மென்ட்களின் எண்ணிக்கை அதிகம் என்பதோடு, தனி வீடு வாங்க கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்க வேண்டும். எனவே, சிலபல லட்சங்களில் வீடு வாங்க நினைக்கிறவர்களுக்கு ஃபிளாட்களே, அதுவும் பழைய ஃபிளாட்களே பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.

பழைய வீடுகளையோ அல்லது ஃபிளாட் களையோ வாங்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என சென்னையின் முன்னணி ரியல் எஸ்டேட் ஆலோசகர்களில் ஒருவரான அரசு அழகப்பனை சந்தித்து பேசினோம்.
''வேலை மற்றும் தொழில் காரணமாக நகரத்துக்குள்ளே வசிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள் விரும்புவது பெரும்பாலும் பழைய வீடுகளாகவே இருக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில் வீடு வாங்க நினைக்கிறவர்களின் முதல் விருப்பமாக இருப்பதும் பழைய வீடுகளே. பழைய ஃபிளாட் என்கிறபோது பொதுவாக 15 வருடத்துக்கு உட்பட்டதாக இருப்பது நல்லது'' என்றவர், பழைய அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையை எப்படி தீர்மானிப்பது என்பது குறித்தும் விளக்கினார்.

''பழைய ஃபிளாட்கள் அமைந்திருக்கும் இடம், கட்டடத்தின் வயது, கட்டடத்தின் பராமரிப்பு, கட்டடத்தின் வலிமை போன்றவற்றைப் பொறுத்து, புதிய ஃபிளாட்டு களைவிட சுமார் 15 முதல் 40 சதவிகிதம் வரை விலை குறைவாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஐந்தாண்டு கொண்ட பழைய ஃபிளாட் எனில் புதிய ஃபிளாட்டைவிட 15-20% விலை குறையும். (எத்தனை ஆண்டு பழைய ஃபிளாட்டுக்கு என்ன விலை என்பது பெட்டி செய்தியில் பார்க்க..!) அதே நேரத்தில், அருமையான பராமரிப்பு, பெயர் சொல்லும் பில்டர் என்கிறபோது பழைய ஃபிளாட்டுக்கு தரும் விலையைவிட 5-10% அதிகம் தந்தாலும் தவறில்லை'' என்றவர், சொத்திற்கான அட்வான்ஸை தந்தவுடன் கட்டாயம் செய்யவேண்டிய சில வேலைகளை பட்டியலிட்டார்.

''சொத்திற்கான அட்வான்ஸை (அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தரவே தராதீர்கள்!) தந்தவுடன் அந்த சொத்தில் வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்பதைக் கட்டாயம் பாருங்கள். தாய் பத்திரம் உள்ளிட்ட பல ஆவணங்களைப் பெற்று வக்கீல் ஒருவரைக் கொண்டு ஆராய்ந்து பாருங்கள். பத்திரம் தொலைந்து விட்டது, டூப்ளிகேட் பத்திரம் வாங்கி இருக்கிறோம் என்று சொன்னால் எச்சரிக்கையாக இருங்கள். வங்கியில் அல்லது தனிநபர்கள் யாரிடமாவது கடன் வாங்கிவிட்டு, அதை கட்டாமல் அல்லது கொஞ்சம் கட்டிவிட்டு, பத்திரம் தொலைந்துவிட்டது என்று போலீசில் புகார் செய்து டூப்ளிகேட் பத்திரம் வாங்க அதிக வாய்ப்பு இருக்கின்றன. டூப்ளிகேட் பத்திரம் உள்ள வீட்டை வாங்கினால், பின்னால் முதலுக்கே மோசம் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. விலை மலிவாக இருந்தாலும் இதுபோன்ற வீட்டைத் தவிர்ப்பது நல்லது. மேலும், சொத்து கைமாறுவதற்கு முன் வீட்டு வரி, தண்ணீர் வரி போன்றவற்றை சரியாக கட்டியிருக்கிறார்களாக என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், இவற்றுக்கான இணைப்பை உங்களின் பெயரில் மாற்றிக் கொள்ள பணம் கொடுக்கும்போதே கையெழுத்து வாங்கிக் கொள்வது அவசியம்'' என்றார்.

தனி வீடு மதிப்பீடு!

தனி வீடு என்கிறபோது அது அமைந்திருக்கும் மனையின் சந்தை விலையோடு, கட்டடத்தின் அப்போதைய மதிப்பைச் சேர்த்தால் வீட்டின் மொத்த மதிப்பு வந்துவிடும். பழைய தனி வீட்டின் மதிப்பை ஒரு தனிப்பட்ட இன்ஜினீயர் மூலம் மதிப்பீடு செய்யுங்கள். சில வங்கிகளே இன்ஜினீயர்களை அனுப்பி மதிப்பீடு செய்து தருவார்கள் என்றாலும், அது நம் தேவையை நிறைவேற்ற உதவுமா என்பது சந்தேகமே! எனவே அந்த மதிப்பீட்டை மறுமதிப்பீடு செய்துகொள்வது நல்லது.  

பழைய வீட்டுக்கும் வங்கிக் கடன்..!

பழைய வீடு வாங்க வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் தாராளமாக கடன் தருகின்றன. இதுகுறித்து இந்தியாவில் வீட்டுக் கடன் அளிப்பதில் முன்னணியில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''பொதுவாக ஃபிளாட்களின் ஆயுள் சுமார் 70 முதல் 75 வருடங்களாக கணக்கிடப்படுகிறது. நல்ல கண்டிஷனில் இருக்கும் ஃபிளாட்களுக்கு, அவை 15 முதல் 20 ஆண்டுகள் பழையதாக இருந்தாலும் கடன் கொடுக்கிறோம். கடனை அதிகபட்சம் 20 ஆண்டுகள் அல்லது கடன் வாங்குபவர் பணி ஓய்வுக்கு முன் கட்டும் விதமாக திரும்ப கட்டும் ஆண்டுகளை முடிவு செய்கிறோம். வங்கிக் கடன் வாங்கி, வீடு வாங்குபவர்களில் சுமார் 15 சதவிகிதத்தினர் பழைய ஃபிளாட் மற்றும் வீடுகளை வாங்குபவர்களாக இருக்கிறார்கள்'' என்றார்.

கடன் விதிமுறைகள்!

பழைய வீட்டுக்கு கடன் வழங்குவதில் விதிமுறைகள் வங்கிக்கு வங்கி மாறுபடுகின்றன. உதாரணமாக, கனரா வங்கி, பழைய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்க கடன் கொடுக்கும்போது, 20 வருடத்துக்கு பழையது என்றால், வீட்டின் மதிப்பில் சுமார் 75 சதவிகித தொகையைத் தான் கடனாக அனுமதிக்கிறது. இதுவே, 20 ஆண்டுகளுக்கு மேல் பழையது என்றால் 40 சதவிகித தொகையைத்தான் கடனாக தரும். ஆனால், கார்ப்பரேஷன் வங்கி பத்து வருட பழைய வீட்டுக்கு 85 சதவிகிதமும், அதற்குமேல் எனில் 80 சதவிகித தொகையையும் கடனாக தருகிறது.

வட்டி விகிதம்!

வழக்கமான வீட்டுக் கடன் போலவே பழைய வீட்டுக் கடனுக்கும் நிலையான மற்றும் மாறுபடும் (ஃப்ளோட்டிங்) வட்டி விகிதத்தில் கடன் தருகிறது. நிலையான வட்டி விகிதத்தைத் தேர்வு செய்தால், ஐந்து அல்லது பத்தாண்டுக்குள் கடனை திரும்பக் கட்டவேண்டும் என சில வங்கிகள் நிபந்தனை விதிக்கின்றன. ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்துக்கு அப்படி எந்த நிபந்தனையும் இல்லை.


வருமான வரிச் சலுகை!

புதிய வீடுகள் மற்றும் ஃபிளாட்கள் போலவே பழைய வீடுகள் மற்றும் ஃபிளாட்களை கடனில் வாங்கும்போது வருமான வரிச் சலுகை இருக்கிறது. வாங்கும் வீட்டை குடியிருக்க பயன்படுத்தினால் திரும்பக் கட்டும் அசலில் 80சி பிரிவின் கீழ் ஒரு லட்ச ரூபாயும், வட்டியில் 1.5 லட்ச ரூபாயும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வீட்டை வாடகைக்கு விட்டால் திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச் சலுகை இல்லை. அதேநேரத்தில், வட்டி முழுமைக்கும் வரிச் சலுகை இருக்கிறது. தவிர, வாடகையை வருமானமாக காட்ட வேண்டும்.

பத்திரப் பதிவு!

புதிய அடுக்குமாடி குடியிருப்பு என்கிறபோது பிரிக்கப்படாத மனைப் பரப்புக்கான (யூ.டி.எஸ்.) அரசு வழிகாட்டி மதிப்பில் 8% முத்திரைத்தாள் கட்டணம், 1% பதிப்புக் கட்டணம் செலுத்தினால் பத்திரப் பதிவு செய்துவிடலாம். ஆனால், பழைய அடுக்குமாடி குடியிருப்பு என்கிறபோது யூ.டி.எஸ். தவிர வீட்டின் மதிப்புக்கும் (தேய்மானம் கழிந்தது போக) 9% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த வகையில் சொத்துப் பதிவுக் கட்டணம் அதிகமாக இருக்கும். இந்த பணத்தையும் முன்பே தயாராக வைத்துக் கொள்வது அவசியம். இந்த பத்திரச் செலவுக்கு ஆகும் பணத்தையும் வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் கடன் அளிக்கின்றன. இந்தக் கட்டணத்துக்கும் 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு கிடைப்பது கூடுதல் சலுகை.

மறுவிற்பனை விலை எப்படி?

அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குபவர் அதை விற்க நினைத்தால் என்ன விலைக்கு விற்பது என்கிற பயம் கூடவே இருக்கிறது. இது தேவையில்லாத பயம் என்கிறார்கள் விவரம் தெரிந்த சில புரமோட்டர்கள். திருச்சி, ஸ்ரீரங்கத்திலுள்ள விக்னேஷ் ஃபிளாட்ஸ் ஹவுஸிங் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.கோபிநாதன் இப்படி சொன்னார்.

''திருச்சி தில்லை நகரை எடுத்துக் கொண்டால் புதிய ஃபிளாட் ஒரு சதுர அடி விலை 5,800 முதல் 6,000 ரூபாயாக இருக்கிறது. இதுவே பத்து வருட பழைய ஃபிளாட் இதைவிட 10-20% விலை குறைவாக 4,500-5,000 ரூபாய் வாக்கில் விலை போகிறது. இந்த ஃபிளாட்டுகள் பத்தாண்டு களுக்கு முன் சதுர அடி சுமார் 700-1,000 ரூபாய் என்கிற அளவில் விற்பனையானது'' என்றார்.

இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்க கூட்டமைப்பின் கோவை பிரிவு தலைவர் சுப்ரமணியனிடம் பேசினோம். ''சென்னையோடு ஒப்பிடும்போது கோவையில் பழைய அபார்ட்மென்ட்க்கு அதிக ஆதரவு இல்லை. 100 புதிய அபார்ட்மென்ட்கள் விற்கிற இடத்தில் 5 பழைய ஃபிளாட்களே கைமாறுகிறது.  புதிய ஃபிளாட்களில் நீச்சல்குளம், லிஃப்ட், தோட்டம், கிளப் ஹவுஸ் போன்றவை இருப்பதால் அவற்றையே மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். கோவையில் உடனடியாக குடியிருக்க வீடு வாங்குபவர்களைவிட எதிர்கால தேவை மற்றும் முதலீட்டு நோக்கில் வாங்குபவர்களே அதிகம். அதேநேரத்தில், பழைய அபார்ட்மென்ட்களின் ரீசேல் வேல்யூவும் அதிகமாகவே இருக்கிறது. இங்குள்ள ராம் நகரில் ஃபிளாட் ஒரு சதுர அடி விலை 4,500 ரூபாய். ஆனால், பழைய ஃபிளாட் 3,500 ரூபாய்'' என்றார்.  

பழைய ஃபிளாட் மற்றும் வீடுகளுக்கு மறுவிற்பனை விலை நன்றாகவே இருக்கிறது. தவிர, குறைந்த முதலீட்டில் உடனடியாக குடியேற நினைப்பவர்களுக்கு பழைய ஃபிளாட் மற்றும் வீடுகள்தான் பெஸ்ட் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

Thursday, January 19, 2012

நட்சத்திரங்களுக்கும் - விருட்சங்களுக்கும் தொடர்பு உண்டு


மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது..  திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்..  உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு ... உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் .. எந்த ஒரு ஜாதகருக்கும், சில சமயங்களில், கிரக நிலைக்கு ஏற்ப எத்தனையோ பரிகாரங்களை செய்த போதிலும், பலன்கள் உடனடியாக கிடைக்காமல் போனால், நீங்கள் தாராளமாக இந்த விருட்சங்களை பரிந்துரைக்கலாம்.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு


பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய  நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..
 சில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லெ யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற  பாதங்களுக்குரிய - பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

சிறுநீரகக் கல்லுக்கு சூப்பரான தீர்வு...


முஸ்கி :  நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த, வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
          இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்துவிடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு  படித்தேன். அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 ரூபாய்  செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதே இந்த பதிவின்  நோக்கம்.
        எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார். மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
        சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
        வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார். வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்(ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர்
(அட வீட்ல நாம தினமும் குடிக்கிறதுதான்  ) .

http://www.sailusfood.com/wp-content/uploads/2008/09/french-beans.jpg

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):

¼ கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ்( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது) `10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறந்தது 2 மணிநேரம்),
மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை( ஒரே முறையில்  குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

       நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மணிக்கு ) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

     கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர் பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளிவருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்...... ஆனால் வராது...... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர் பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. எப்பூடி..? கூகுல் அம்மா ... வாழ்க.. வாழ்க... 
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரை  சேமிக்கலாம்,.... ( வடை  போச்சே.... ) மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ள்லாம். தினமும் 3 லிட்டெர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

    சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடைந்து  விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நாட்கள்  என்பது மிக அதிகமான காலம் , அதனால், இதை நாம் கல் உருவாவதை தடுக்கும் முன் எச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதி உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல்  உருவாவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள  ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினைக்கு  நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம்  பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப்  பிழிந்து, ஒரு டேபிள்  ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாறுடன்  ( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிறில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொள்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம். .

வாழைத் தண்டு ஜூஸ் : வாழத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை மற்றும்  கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை இல்லையெனில் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.


டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொறுக்க முடியாதவர்கள் டாக்டரிடம்  சென்றுவிடுவதே நல்லது.

டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

டிஸ்கி 3 : இந்த ஆலோசனை இலவசம் தான், யாரும் இதற்காக எனக்கு பணம்!!! அனுப்ப வேண்டாமென்று கூவிக்கொள்கிறேன்....
எவன்டா இந்த டிஸ்கியை கண்டு பிடிச்சான்.. ங்கொய்யாலே  .. 

(நன்றி : http ://pattikattan .blogspot .com )