Thursday, April 26, 2012

'புத்தகங்கள் கொளுத்தப்படும்போது அந்த நெருப்பில் எரிவது மனிதர்களே’.

உலக வரலாற்றில் பல நூலகங்கள் நேரடித் தாக்குத லுக்கு உள்ளாகி இருக்கின்றன. யாழ்ப்பாண நூலகத்தைக் காவல் துறையும் ராணுவமும் சேர்ந்து தீயிட்டுக் கொளுத்திய சம்பவத்தில் 97 ஆயிரம் புத்தகங்கள் சாம்பல் ஆயின. அதில் தமிழ் இனத்தின் வரலாறு, அறிவியல், கலை, இலக்கியம் அழிக்கப்பட்டன. அதே போல், கோயபல்ஸ் தலைமையில், 1933-ம் ஆண்டு மே 10-ம் நாள் ஜெர்மனியில், கொளுத்தப்பட்ட 25 ஆயிரம் புத்தகங்களின் மூலம் யூத இனத்தின் கலை, வரலாறு அழிக்கப்பட்டன. யூதக் கவிஞன் ஹெயின் ரிச் வார்த்தையில் இதைச் சொல்வதானால், 'புத்தகங்கள் கொளுத்தப்படும்போது அந்த நெருப்பில் எரிவது மனிதர்களே’.  

No comments:

Post a Comment