Tuesday, January 3, 2012

முக்தி அடைய கீதை சொல்லியது Chapter 12 Verses 13- 14


முக்தி அடைய

பெற்றோர்களது மொழி பிள்ளைகளுக்கு வருவது போலவே, மதமும் வருகிறது. அதற்குமேல் அதில் ஒன்றுமில்லை. மதம் என்பது எந்த விகாரங்களும் அற்ற ஆத்மாவின் இயல்பாக எப்படி இருக்க முடியும்? மதம் என்பது மனித பிரக்ஞையின் ஒரு அடுக்கில் ஒரு கட்டத்தில் மனிதனால் ஏற்கப் படுவது. அதை அந்தப் பிறவியிலேயே பலவிதமாக மாற்றிக் கொள்ளவும் முடியும், உதறித் தள்ளிவிடவும் முடியும்.

சைவராக இருந்து வைஷ்ணவரானார் திருமழிசையார். வைஷ்ணவராக இருந்து சைவரானார் ஹரதத்தர்.. சைவ, வைஷ்ணவ சமரசத்தைப் பாடிக் கொண்டே முருகபக்தராக இருந்தார் அருணகிரியார். சாக்த, சைவ, வைஷ்ணவ சாதனை முறைகளைப் பயின்று அவற்றில் இழையோடும் ஒருமையைக் கண்டுணர்ந்து அதைப் போதித்தார், நமக்கு மிக சமீபகாலத்தில் வாழ்ந்த ஸ்ரீராமகிருஷ்ண

கடவுள் நிலையை அடைவதே! அது கூட நாம் கடவுள் நிலையை அடைந்து விட்டோம் என்பதெல்லாம் அடையும் பொழுது தெரியாது. கடவுள் நிலையை அடைவது என்பதை ஒரு உதாரணமாகச் சொன்னால் இரண்டு சொட்டு தண்ணீர் அருகருகே இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சொட்டு மற்றொரு சொட்டுடன் இணைந்து விட்டால் இரண்டும் ஒரே சொட்டுத் தண்ணீராகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலை தான் நமது ஆத்மா பரமாத்மாவுடன் இணையும் நிகழ்வு. இதையே முக்தி என்கிறோம். அதற்கு முதலில் பரமாத்மா வெளியில் இருக்கும் தண்ணீர் என்றும் நாம் உடலில் இருக்கும் தண்ணீர் என்பதையும் முதலில் முழுமையாக உணர வேண்டும். அப்படி உனர்ந்து கொள்ளும் பக்குவத்தையே தத்வம் அஸிஅதாவது அதுவே நீஎன்று புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். அதாவது தண்ணீர் இரண்டு தனித்தனி துளிகளாக இருந்தாலும் இரண்டும் அது ஒன்றே என்பது போல தான் இதுவும். ஆக இரண்டரக் கலந்து நாமே இறை நிலையை அவ்வாறு அடைவதே முக்தியாகும். அவ்வாறு இரண்டரக் கலக்கும் நிலை தான் அஹம் ப்ரம்மாஸ்மி”…அங்கே உள்ளும் புறமும் ப்ரம்மமாகிய நானே என்றுணர்ந்து அதுவாகவே ஆவதாகும். நாமே அதுவாக ஆன பிறகு நாம் அதில் கலந்தோமா அல்லது அதுவாக ஆனோமா என்பதெல்லாம் நமக்கு தெரியாது. நாம் அப்படியே இருப்போம் அவ்வளவு தான். முக்தி பற்றி சந்தேகம் இருப்பவர்களுக்கு புரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்..

முக்தி அடைய கீதை சொல்லியது  Chapter 12 Verses 13- 14

அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)
சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன், எதரி இன்மை, உன்னை எதரியாக நினைபவரிடமும் அன்பு காட்டுதல்)
நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக )
ஸம துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)
க்ஷமீ (பொறுமை உடையவனாய்)
ஸ ந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )
யோகி (யோக நெறியில் நிற்பவன்)
யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)
த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)
மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)
யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )
ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்)

——–
தன்னை பக்திமான் என கருதிக் கொண்டு, தன்னுடைய தெய்வம் தான் உயர்ந்தது எனக் காட்ட ஆயிரக் கணக்கில் சுலோகங்களை மேற்கோள் காட்டும் சான்றோர்களே, பக்திக்கு இலக்கணத்தை பாருங்கள்!!  நான் வணங்கும் தெய்வம்தான் உண்மையானது, முழு முதற்கடவுள் என அகந்தையும், மமதையும் நிரம்பிய நிலையில் இருந்து கொண்டு, முக்கியமானதாக கூறப் பட்டுள்ள எல்லா பண்புகளையும் தூக்கி விட்டு, பெரிய பக்திமான் போல எண்ணிக் கொள்கிறீர்கள். கிருட்டினரின் கொள்கைக்கு எதிராக செயல் படுகிறீர்கள்!


உயிர் என்பது என்பது என்ன ஆதிசங்கரர் கூறுவது:

நான் சைவமும் அல்ல, சாக்தமும் அல்ல,
ஐந்து இரவுகள் திருமாலை வழிபடும் வைணவமும் அல்ல,
எனக்கு வேதமும் இல்லை, வேள்வியும் இல்லை, ஆசாரமும் இல்லை, தவமும் இல்லை
சிதானந்த ரூபம் சிவம் நான் சிவம் நான்”! (ஆத்ம ஷட்கம், ஆதிசங்கரர்)

No comments:

Post a Comment