Tuesday, November 20, 2012

சொசுக்களை விரட்ட


சொசுக்களை ஒழிக்க முடியாது.
 ஆனால் விரட்ட முடியும். (டிவிட்டர்ல இல்லங்க, இது நிஜ கொசு). பலப்பல புதிய மருந்துகள், வேப்பரைசர்கள் கொசு விரட்டுவதற்கு வந்தாலும், நான் சொல்லப் போகும் இந்த முறை, மிகவும் எளிமையானது, பண செலவு இல்லாதது, ஆனால் வலிமையானது.

ஒரு (சூப் சாப்பிடுகிற) கோப்பை எடுத்து நீரை 3/4 அளவுக்கு ஊற்றவும். அதில், பத்து சிறிய வில்லை சூடத்தை (கற்பூரங்க நீங்க) நீரில் மிதக்கவிடவும். கொசுக்கள் அடிக்கடி, அதிகமாக புழங்கும் இடத்தில் அந்த கோப்பையை வைத்துவிடவும்.

கொசு அண்டவே அண்டாது. இது tried and tested method. கண் கூடாக செய்து பார்த்து வெற்றி பெற்றதால் சொல்கிறேன். 1 வாரம் கழித்து, சூடம் கறைந்து நீரில் எண்ணெய் மிதந்தால், கோப்பையை கழுவி, புதிதாக நீர் மற்றும் புதிய சூடம் மாற்றவும். இதனை யாரேனும் முன்னமே சொல்லியிருக்கலாம். நான் தற்போதுதான் கண்டேன். அனுபவத்தில் உணர்ந்தேன்.

கொசுவுக்கு தெரியும் கற்பூர வாசனை. செய்து பார்த்துவிட்டு, ஒரு வாரம் கழித்து மறக்காமல் கமெண்ட் செய்யவும். அனுபவத்தை பகிரவும்

No comments:

Post a Comment