Thursday, September 10, 2015

டிப்ஸ் டிப்ஸ்- Part 13

* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள். கொப்பளம் ஏற்படாது.

* தேவைக்கு அதிகமாக இஞ்சி இருந்தால் அதை மண்ணில் புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும் போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.

* பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க அதை இரண்டிரண்டாக நறுக்கி வைத்து விடுங்கள்.

* உருளைக் கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.

* முதல்நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை வரையில் வதங்காமல் இருக்க வேண்டுமா? பூவை ஈரத் துணியில் சுற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை நன்றாகக் கழுவிவிட்டு அந்தப் பாத்திரத்திற்குள் பூவை வைத்து மூடிவையுங்கள். பூ வாடாமல் வதங்காமல் வைத்த மாதிரியே இருக்கும்.

* ஜாம் பாட்டிலில் ஜாம் தீர்ந்து போனால் அதில் பாலை ஊற்றுங்கள். பாட்டிலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாம் பாலுடன் கலந்து கரைந்துவிடும். பிறகு அந்தப் பாலை அருந்தினால் சுவையாக இருக்கும். ஜாம் வீணாகாது.

* வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த ஜவ்வரிசியைச் சாதம்போல் வேகவைத்து மோரில் கரைத்து உப்புப்போட்டுச் சாப்பிட வயிற்றுப்போக்கு நிற்கும். வயிற்று வலியும் இருக்காது.

* குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு 5 மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.

* பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கிக் கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து

குடித்துவர அல்சர் சீக்கிரமே குணமாகும்.

* தேனில் நெல்லிக்காய்ப்பொடி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்கவே இருக்காது.

* மூட்டு வலி, முழங்கால் வலியைக் குறைக்க முடக்கத்தான் கீரை, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துத் தோசை மாவில் கலந்து தோசை வார்த்துச் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

* மாதுளம் பழச்சாறுடன் இஞ்சிச்சாறு, தேன் கலந்து மூன்று வேளையும் அருந்தி வர வறட்டு இருமல் நீங்கும். தொண்டைக்கும் இதம் கிடைக்கும்.

* தக்காளியைச் சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும்.

* சொறி, வேர்க்குரு வராமல் தடுக்க பாசிப்பயறு, மஞ்சள் தூள், வேப்பிலையை மைபோல் அரைத்து உடலில் பூசி 10 நிமிடம் கழித்துக் குளித்து வாருங்கள். சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

No comments:

Post a Comment