Tuesday, May 22, 2012

மூளை உற்சாகப் புதிர்கள் -1


1) இந்த இரண்டு தாள்களையும் ஒரே சமயத்தில் மேலிருந்து கீழே போட்டால், 'அ' தாள் முதலில் தரையில் விழ வேண்டும். வேறு எந்தப் பொருளையும் அவற்றோடு இணைக்கக் கூடாது. எப்படி 'அ' தாளை முதலில் தரை தொட வைப்பீர்கள்?

2) தனது படையில் உள்ள யானைகளைக் கணக்கெடுக்கச் சொன்னார் மன்னர். அதிகாரி வந்து 'சிக்ஸ்டி ஹெட்ஸ்' (60 தலைகள்) என்று சொன்னார். இன்னொரு முறை கணக்கெடுக்கும்படி வேறு ஒரு அதிகாரியை அனுப்பினார் மன்னர். அவர் வந்து 'சிக்ஸ்டி ஃபோர் ஹெட்ஸ்' என்று சொன்னார். அவையோர் புரியாமல் குழம் பினார்கள். ஆனால், மன்னர் 'இரண்டுமே சரி' என்றார். எப்படி?

3) இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல உங் களுக்கு அதிகபட்சம் இரண்டு விநாடிகள்தான் நேரம். கமான் க்விக்! டெலிபோன் அல்லது செல்போனின் டயல் பட்டன்களில் உள்ள அனைத்து எண்களையும் பெருக்கினால் (1 ஜ் 2 ஜ் 3 ஜ்... என்று) வரும் தொகை என்ன? ம்... முதல் நொடி முடிந்துவிட்டது!

4) 30 1/2 + 10 = ?

5) 1950-ல், நமது பிரதமரின் பெயர் என்ன?

6) வாய் பேச முடியாத ஒருவர் கடைக்குச் சென்று சிகரெட் வேண்டும் என்றால் எப்படிக் கேட்பார்? ஆள் காட்டி விரல், நடுவிரல் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வாயில்வைத்து ஊதுவதுபோலக் கேட்பார். அதேபோல, கண் தெரியாத ஒருவர் சீப்பு வேண்டும் என்றால் எப்படிக் கேட்பார்?

7) கி,ஙி,சி,ஞி இந்த நான்கு எழுத்துக்களே வராமல் 100 ஆங்கில வார்த்தைகளைக் கடகடவென்று சொல்லுங்கள் பார்ப்போம்?

8. என்னிடம் மூன்று லிட்டர் ஜக்கும், ஐந்து லிட்டர் ஜக்கும் இருக்கிறது. எனக்குச் சரியாக ஒரு லிட்டர் தண்ணீர் மட்டும் தேவை. இரண்டே முயற்சிகளில் ஒரு லிட்டர் நீரை எப்படி அளந்து எடுப்பது?

Ans:

1) 'அ' பேப்பரைக் கசக்கிக் கீழே போடுங்கள்!

2) முதல் முறை கணக்கெடுத்தவர் 'sixty heads' என்று '60 தலைகள்' எனப் பொருள்படக் கூறினார். இரண்டாமவர் 'sixty fore-heads' என்று '60 நெற்றிகள்' எனப் பொருள்படக் கூறினார். இரண்டுமே சரிதானே!

3) ரொம்ப சிம்பிள்... இரண்டு விநாடிகளே அதிகம்தான். டயல் பட்டன்களில் உள்ள ஜீரோவை எந்த இடத்தில் சேர்த்துப் பெருக்கினாலும், விடை ஜீரோவாகத்தானே இருக்கும்!

4) 25 என்று கச்சிதமாகப் பதில் சொல்லியிருந்தால், அது தப்பு மாமே! சரியான விடை 70. எப்படி? இப்படி.... 30ஐ 1/2ஆல் வகுத்தால் வரும் விடை 60. அதனுடன் 10 சேர்த்தால் 70. பழக்கப்பட்ட உங்கள் மனது 30-ல் இரண்டை அடித்தால் 15 என்று விடை சொல்லி இருக்கும். மாத்தி யோசி மாப்ளே!

வழிமுறை: 30 1/2 + 10
= 30 * 2 + 10
= 60 + 10 = 70

5 அப்போதும் அவர் பெயர் மன்மோகன் சிங்தான். 1950-ல் ஜவஹர்லால் நேருதான் பிரதமர். ஆனால், இப்போதைய பிரதமரின் அப்போதைய பெயர்தானே கேட் டோம்!

6) அவருக்குத்தான் பேச வருமே. 'சீப்பு வேண்டும்!' என்று வாய் விட்டுக் கேட்பார்!

7) Zero முதல் Ninetynine வரை உள்ள 100 வார்த்தைகளிலும் A,B,C,D என்ற எழுத்துக்கள் வராது!

8) மூன்று லிட்டர் ஜக்கில் நீரை நிரப்பி, ஐந்து லிட்டர் ஜக்கில் ஊற்றவும். மீண்டும் மூன்று லிட்டர் ஜக்கில் நீரை நிரப்பி ஐந்து லிட்டர் ஜக்கில் ஊற்றினால், இரண்டு லிட்டர் தண்ணீர் போக, ஜக்கில் சரியாக ஒரு லிட்டர் நீர் மட்டுமே மிச்சம் இருக்கும்!

3 comments:

  1. அன்பின் புவன் - 4ம் கேள்வி - 30 ஐ அரையால் வகுக்க வேண்டுமெனச் சொல்ல வில்லையே - 30 1/2 +10 எனச் சொன்னால் எப்படி ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அன்பின் புவன் - 7வது கேள்வி கி ஙி சி ஞி வராத 100 ஆங்கில சொற்களை எளிதில் கூறலாமே - பதிலி A B C D எங்கே வந்தது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete